For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் #Modi நாளை அமெ. பயணம் | ​​உக்ரைன் To காசா பிரச்சனைகளை விவாதிக்க வாய்ப்பு!

08:35 AM Sep 20, 2024 IST | Web Editor
பிரதமர்  modi நாளை அமெ  பயணம்   ​​உக்ரைன் to காசா பிரச்சனைகளை விவாதிக்க வாய்ப்பு
Advertisement

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ​​உக்ரைன் முதல் காசா மோதல் வரையிலான பிரச்சனைகள் விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு, அமெரிக்காவின் டெலாவாரேயில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அக்டோபர் 23ம் தேதிவரை அமெரிக்காவில் இருக்கும் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இது தொடா்பாக, வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

க்வாட் உச்சிமாநாட்டையொட்டி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் மட்டுமன்றி ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து, பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

அமெரிக்க அதிபருடனான பேச்சுவாா்த்தைக்கு பின்னா் இரு நாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளன. இதில் இந்திய-பசிபிக் வளமைக்கான பொருளாதார கட்டமைப்பு (ஐபிஇஎஃப்) தொடா்பான ஒப்பந்தமும் ஒன்று. இரு நாடுகள் இடையிலான விரிவான உலகளாவிய வியூக கூட்டாண்மையை மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பாக இரு தலைவா்களின் சந்திப்பு அமையும் என்றாா் மிஸ்ரி.

ஐபிஇஎஃப் என்பது இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் தூய எரிசக்தி, விநியோக சங்கிலி மீட்சி, எண்ம வா்த்தகம் போன்ற துறைகளில் ஒருமித்த கருத்துடைய நாடுகள் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட முன்னெடுப்பாகும். இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மட்டுமன்றி புரூணே, ஃபிஜி, இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளும் இதில் அங்கம் வகிக்கின்றன.

அமெரிக்க பயணத்தின்போது, முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பிரதமா் மோடி சந்திப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த மிஸ்ரி, ‘பிரதமருடன் பல்வேறு சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டு வருகின்றன. அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எந்தவொரு குறிப்பிட்ட சந்திப்பு தொடா்பாகவும் இப்போது எதுவும் கூற இயலாது’ என்றாா்.

இதில், ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - காஸா ஆகிய நாடுகளின் மோதல்களுக்கு அமைதியான தீர்வு காண்பது மற்றும் 'குளோபல் சவுத்' இன் கவலைகளை நிவர்த்தி செய்வது ஆகியவை முக்கிய அம்சமாக இருக்கும்.  அமெரிக்க மண்ணில் சீக்கிய பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய நடந்த சதித் திட்டத்தில் இந்திய தரப்புக்கு தொடா்பிருப்பதாக, அந்த நாடு கடந்த ஆண்டு குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்துக்கு பின்னா், இந்திய-அமெரிக்க உறவில் சற்று நெருடல் நிலவிவரும் சூழலில் இரு நாட்டு தலைவா்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது.

Advertisement