லட்சத்தீவுகள் குறித்து ட்வீட்.... நெட்டிசன்களை உற்சாகமூட்டிய பிரதமர் மோடி...!
லட்சத்தீவுகள் பயணம் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பதிவுக்கும் ஏராளமான நேர்மறை கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், அடிக்கல் நாட்டவும் லட்சத்தீவுகள் சென்றார். இதனிடையே அங்குள்ள கடற்கரையில் அவர் நேரத்தை செலவிடும்படியான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
லட்சத்தீவுகள் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது X தள பக்கத்தில், “சமீபத்தில் லட்சத்தீவுகள் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் அழகிலிருந்தும், அங்குள்ள மக்களின் வரவேற்பில் இருந்தும் இன்னும் நான் மீளவில்லை. என்னை உபசரித்த மக்களுக்கு நான் நன்றி கூறினேன். லட்சத்தீவின் சில காட்சிகள் இங்கே உள்ளன” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், “உங்களுக்கும் இருக்கும் சாகச வீரரை வெளிக்கொண்டு வர விரும்புவோர், நிச்சயம் லட்சத்தீவுகள் செல்ல வேண்டும். அங்கு தங்கியிருந்தபோது நானும் ஸ்நோர்கெல்லிங் செய்தேன். உற்சாகமான அனுபவமாக அது அமைந்தது” என்றும் பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள் : ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் - போக்குவரத்துத்துறை உத்தரவு
இதற்கு நெட்டிசன்கள் பலர் பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ‘மாலதீவு ❌, லட்சத்தீவு ✅’ என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி இருக்கும் புகைப்படங்கள் போல் தானும் ரீ-கிரியேட் செய்யப்போவதாக மற்றொரு X தள பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘வயது வெறும் எண் மட்டுமே. பிரதமருக்கு சல்யூட்’ என்று இன்னொரு நபர் பதிவிட்டுள்ளார்.