Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கடலுக்கு அடியில் மூழ்கிய துவாரகா நகரை பார்வையிட்டு வழிபாடு செய்த பிரதமர் மோடி!

04:48 PM Feb 25, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி கடலுக்கு அடியில் மூழ்கிய துவாரகா நகரை பார்வையிட்டு வழிபாடு செய்தார்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.25) தனது சொந்த மாநிலமான  குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.  அங்கு,  ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை பிரதமர்  மோடி இன்று திறந்து வைத்தார்.

ஓகா- பெய்ட் துவாரகா சிக்னேச்சர் பாலம் என்றும் அழைக்கப்படும் சுதர்சன் சேது, சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  2.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம்,  புகழ்பெற்ற துவாரகதீஷ் கோயிலுக்கு வருகை தரும் மக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தததாக பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,  பிரதமர் மோடி கடலுக்குள் மூழ்கிய துவாரகா நகரத்திற்கு சென்றார்.  துவாரகையில் உள்ள துவாராதீஷ் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி, கடலுக்குள் இறங்கி வழிபாடு செய்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "நீரில் மூழ்கியிருக்கும் துவாரகை நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது.  ஆன்மிக மகிமை மற்றும் பக்தி கொண்ட ஒரு பழங்கால சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்” என்று பதிவிட்டிருந்தார்.

Tags :
DwarkaGujaratNarendra modiPM ModiPMO Indiaprime minister
Advertisement
Next Article