Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”திருக்குறளை உலகப் பொதுமறை என பிரதமர் அறிவிக்க வேண்டும்”- கவிஞர் வைரமுத்து பேட்டி!

சென்னையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறளை உலகப் பொதுமறை என்று பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து பேசினார்
11:59 AM Jan 15, 2025 IST | Web Editor
சென்னையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறளை உலகப் பொதுமறை என்று பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து பேசினார்
Advertisement

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

Advertisement

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்த பேசுகையில், ”கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு இந்த ஆண்டு வெள்ளி விழா கொண்டாடுவதால் திருவள்ளுவருக்கு பொன்னாண்டு. பிரதமர் மோடி 70 நாடுகள் கூடியிருந்த பேரவையில் திருவள்ளுவர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, உலகம் முழுவதும் திருக்குறள் பரப்பப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு, எங்களுடைய வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம்.

எந்த தனி மதமும் அதை சொந்தம் கொண்டாட முடியாது. திருக்குறளை உலகப் பொதுமறை என்று ஏற்றுக்கொண்டு பிரதமர் அறிவிக்க வேண்டும். ஜனவரி 2 திருக்குறள் உரை எழுத தொடங்கிவிட்டேன். உள்ளுக்குள் நுழைந்த பொருளுக்குள் புகுந்து அறிவுக்குள் விரிந்து எழுதுகிறேன். காணாத திருக்குறள், கேளாத திருக்குறள், வாசிக்காத திருக்குறளை இளைஞர்கள் மத்தியில் இந்த உரை சேர்க்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

தொடர்ந்து, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது” என பதிலளித்தார்.

Tags :
PongalThiruvalluvarDayvairamuthu
Advertisement
Next Article