விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவை நேரில் சந்தித்து வாழ்த்திய பிரதமர் மோடி!
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற சுபான்ஷு சுக்லாவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்தினார்.
08:43 PM Aug 18, 2025 IST | Web Editor
Advertisement
இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' திட்டத்தின் கீழ் சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். இவருடன் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகியோரும் இணைந்து கொண்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் வரை தங்கி, ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்ட அவர்கள் கடந்த ஜூலை 15-ந்தேதி பூமிக்கு திரும்பினர்.
இதன் மூலம், 41 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். இதனைதொடர்ந்து சுபான்ஷு சுக்லா நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு, அவரது குடும்பத்தினர், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்ச்ர் ஜிதேந்திரா சிங், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்பட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, சுபான்ஷு சுக்லாவை இல்லத்திற்கு நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “சுபன்ஷு சுக்லாவுடன் ஒரு சிறந்த உரையாடல் இருந்தது. விண்வெளியில் அவரது அனுபவங்கள், அறிவியல்,தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் லட்சிய திட்டமான ககன்யான் உட்பட பல்வேறு தலைப்புகளில் நாங்கள் விவாதித்தோம். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement