Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஊழலை சட்டப்பூர்வமாக மாற்றியவர் பிரதமர் மோடி!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

05:57 PM Apr 17, 2024 IST | Web Editor
Advertisement

ஊழலை சட்டப்பூர்வமாக மாற்றியவர் பிரதமர் மோடி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தயாநிதி மாறன் இருந்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைக்குரல் ஆக இருந்தவர் தான் தயாநிதி மாறன். தமிழச்சி தங்க பாண்டியன் பேராசிரியர் பணியை விட்டு மக்கள் பணிக்கு வந்தவர். மீண்டும் அவருடைய குரல் ஒளிக்க வேண்டும். அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர்கள் வெற்றி பெற வேண்டும். நீங்கள் தயாராக உள்ளீர்களா வாக்களிக்க. பொதுமக்கள் முகத்தில் மகிழ்ச்சி உள்ளது. இந்த தேர்தலில் திமுக 40 தொகுதிகளில் வெற்றி பெற உள்ளது.

காங்கிரஸ் வாங்கி கணக்கை பாஜக முடிக்கியது. பிரதமர் மோடி, 20 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தாரா? வேலைவாய்ப்பு பத்தி கேட்டா இளைஞர்களை பக்கோடா போட சொல்லிகிறார் மோடி. தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் தான் நிதி வாங்குகிறார்கள்.

பாஜக தேர்தல் நிதியை ED, IT துறையை வைத்து நிதி பெறுகிறார்கள். இந்தியா எத்தனையோ பிரதமரை பார்த்து இருக்கும் ஆனால் மோடி மாதிரி பார்த்திருக்க முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்கிறார். ஊழலை சட்டபூர்வமாக மாற்றியவர் மோடி தான். நாம் இந்தியா கூட்டணி பெயர் வைத்ததால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற முயல்கிறார்கள்.

திமுக ஊழல் கட்சி, குடும்ப அரசியல் என்று பழைய தேய்ந்து போன டேப்பிர் கார்டு போல் பேசிக்கொண்டு வருகிறார். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என தெரிவித்தது தான் பொதுமக்கள் மீது நடந்த முதல் தாக்குதல். அரிச, பருப்பு, ஆடைகள் போன்ற பொருட்களுக்கு வரி போட்டு ஏழை மக்கள் பணத்தை பாஜக திருடுகிறது.

தமிழ் நாட்டில் உள்ள மக்கள் நல திட்டங்களை ஒழிக்க பார்க்கிறார் மோடி. பாஜக ஏழைகளின் பணத்தில் கூட லாபம் ஈட்ட பார்க்கிறது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒற்றை சர்வாதிகார ஆட்சியாக மாற்றி விடுவார். தேசிய கொடியை காவி கொடியாக மாற்றுவார்.

மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் பொதுமக்கள் சொல்லும் கருத்துகள் தான் என்னுடைய வாழ்நாள் பேராக கருகிதுகிறேன். யாரு உண்மையான எதிரி என்று தெரியாமல் களத்துக்கு வருகிறார் எடப்பாடி. தினகரன், பன்னீர்செல்வம், சசிகலா போன்றவர்கள் முதுகில் குத்தியவர் தான் எடப்பாடி பழனிசாமி.

மோடி, அமித்ஷா, ஆளுநர் போன்ற தலைவர்கள் பற்றி எடப்பாடி விமர்சனம் செய்ய மாட்டார். இந்தியா கூட்டணியின் வெற்றி தமிழ் நாட்டில் தொடங்கட்டும். நாடும் நமதே நாற்பது நமதே என்று கூறி உரையை முடித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Tags :
election campaignElection2024Elections with News7 tamilElections2024INDIA AllianceLoksabha Elections 2024MKStalinnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article