For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் மோடி நாளை (ஆக.10) செல்கிறார்!

07:52 PM Aug 09, 2024 IST | Web Editor
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் மோடி நாளை  ஆக 10  செல்கிறார்
Advertisement

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளார் பிரதமர் மோடி.

Advertisement

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு பிரதமர் மோடி நாளை (ஆக.10) செல்கிறார். காலை 11 மணியளவில் கண்ணூர் செல்லும் மோடி, பின்னர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை வான்வழியாக பார்வையிடுகிறார். அதன் பின் சாலை வழியாக வந்து ராணுவத்தால் கட்டப்பட்ட பெய்லி பாலத்தை பார்வையிடுகிறார். அப்போது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர், அவரிடம் மீட்புப் பணிகள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். தொடர்ந்து நிவாரண முகாம் மற்றும் மருத்துவமனைக்கும் அவர் செல்கிறார். பேரிடரில் தாய், தந்தையை இழந்த மூன்றாம் வகுப்பு மாணவி அவந்திகாவையும், மேப்பாடி தனியார் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரிக்கிறார். பிரதமருடன் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியும் செல்கிறார்.

அங்கு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர் நலம் விசாரிக்க உள்ளார். பின்னர் பிரதமர் மோடி தலைமையில் அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில், வயநாடு சம்பவம் குறித்தும் தற்போது நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவைத் தொடா்ந்து முண்டக்கை, சூரல்மலை ஆகிய மலைக் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement