இன்று தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி!
இந்தியப் பிரதமர் மோடி மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று இரவு விமானம் மூலம் இரண்டு நாள் பயணமாகத் தமிழகம் வருகிறார்.
இன்று இரவு தூத்துக்குடியில், ரூ. 381 கோடி செலவில் சர்வதேசத் தரத்தில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தைத் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும், சுமார் ரூ. 4,500 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து நாளை மறுநாள், பிரதமர் மோடி அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் கலந்துகொள்கிறார்.
இந்த விழாவில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறார். அத்துடன், இசைஞானி இளையராஜாவின் புகழ்பெற்ற 'திருவாசகம்' சிம்பொனி இசை நிகழ்ச்சியையும் பிரதமர் கண்டு ரசிக்க இருக்கிறார்.