அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி புது அறிவிப்பு வெளியீடு!
அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது X தளப் பதிவில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
ராமரின் ஒளியிலிருந்து உலகிலுள்ள அனைத்து பக்தர்களும் ஆற்றலைப் பெறுகின்றனர். இந்த மங்களகரமான நாளில் என்னுடைய தீர்மானம் மேலும் வலுவடைந்துள்ளது. இந்திய மக்களின் இல்லங்களில் சோலார் மேற்கூரைகள் நிறுவப்பட வேண்டும். அயோத்தியிலிருந்து திரும்பிய பிறகு நான் மேற்கொண்ட முதல் முடிவு இதுதான். எனது அரசு பிரதம மந்திரி சூர்யோதயா திட்டத்தை தொடங்கும். இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும். இந்தத் திட்டத்தினால் மின் கட்டணம் குறைவதோடு, இந்தியாவை ஆற்றலில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற உதவும் எனப் பதிவிட்டுள்ளார்.
सूर्यवंशी भगवान श्री राम के आलोक से विश्व के सभी भक्तगण सदैव ऊर्जा प्राप्त करते हैं।
आज अयोध्या में प्राण-प्रतिष्ठा के शुभ अवसर पर मेरा ये संकल्प और प्रशस्त हुआ कि भारतवासियों के घर की छत पर उनका अपना सोलर रूफ टॉप सिस्टम हो।
अयोध्या से लौटने के बाद मैंने पहला निर्णय लिया है कि… pic.twitter.com/GAzFYP1bjV
— Narendra Modi (@narendramodi) January 22, 2024