Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து விமர்சித்த பிரதமர் மோடி! காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு!

08:30 PM Feb 05, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்ததால் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

Advertisement

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் பேசுகையில், நாட்டின் திறனை ஒருபோதும் நம்பாதுதான் காங்கிரஸின் மனநிலை என்றும், தங்களை ஆட்சியாளர்களாகவும், பொதுமக்களை குறைந்தவர்களாகவும், சிறியவர்களாகவும் கருதுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அறிக்கையில், நேரு இந்தியர்களை சோம்பேறிகள் மற்றும் அறிவாற்றல் குறைந்தவர்களாக நினைத்திருந்ததாக குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு எந்த உரிமையையும் கொடுக்காமல் காங்கிரஸ் வைத்திருந்ததாகவும், காங்கிரஸ் கட்சியில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதாகவும், குடியரசுத் தலைவரின் உரை உண்மைத் தகவலின் அடிப்படையிலானது எனவும் பிரதமர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார்.

Advertisement
Next Article