Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி!

09:35 PM Jun 10, 2024 IST | Web Editor
Advertisement

3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா அகியோரை தொலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்து பெற்றார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இந்நிலையில், அதிகபட்ச தொகுதிகளில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா நேற்று (ஜூன் 9) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில்  நடைபெற்றது. அவருடன் சேர்த்து 72 பேர் மத்திய அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், செஷல்ஸ் துணை அதிபர் அகமது அதிஃப் ஆகிய 7 அண்டை நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி தூய்மைப் பணியாளர்கள், என பல்வேறு தரப்பைச் சேர்ந்த சுமார் 8000 பேர் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள் : சல்மான்கான் – ராஷ்மிகா நடிக்கும் ‘சிக்கந்தர்’ திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடக்கம்! – படக்குழு அறிவிப்பு!

நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டதும் உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி இன்று (10.06.2024) முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல்,  முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா ஆகிய மூவரிடமும் தொலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்து பெற்றுக்கொண்டார்.

Tags :
BJPDr Manmohan SinghElections2024Former PresidentFormer Prime MinisterHD Deve GowdaLokSabhaElections2024ModiCabinetNarendramodiNDAAlliancePMModiPMOIndiaPratibha Patil
Advertisement
Next Article