Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆந்திராவில் பிரதமர் மோடி ரோடுஷோ - மக்கள் உற்சாக வரவேற்பு!

08:00 PM Jan 08, 2025 IST | Web Editor
Advertisement

ஆந்திராவில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்திய நிலையில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Advertisement

பிரதமர் மோடி ஆந்திர மாநிலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இந்தநிலையில், விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்த பிரதமர் மோடியை அம்மாநில ஆளுநர் அப்துல் நசீர், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், அங்கிருந்து ஆந்திரா பல்கலை மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வெங்கடாதிரி வண்டில்லுவில் இருந்து திறந்த ஜீப்பில் ரோடு ஷோ மேற்கொண்டார். சாலைகளின் இருபுறங்களில் தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர். தொண்டர்கள் பூக்களை வீசி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரும் கலந்து கொண்டனர். சாலைகளின் இருபுறமும் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement
Next Article