Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

11:59 AM Dec 07, 2023 IST | Web Editor
Advertisement

முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக மழை, வெள்ளம் பாதிப்பு பற்றி  கேட்டறிந்தார். 

Advertisement

மிக்ஜாம் புயலால் சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கின.  சென்னையின் போரூர்,  காரப்பாக்கம், மணப்பாக்கம்,  முகலிவாக்கம்,  வேளச்சேரி,  மேடவாக்கம்,  மடிப்பாக்கம்,  பள்ளிக்கரணை, முடிச்சூர்,  மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்தது.

இங்கே வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு பக்கம் அரசின் மீட்பு பணிகள் நடக்க இன்னொரு பக்கம் தன்னார்வலர்களும் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் , பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் இன்று கேட்டறிந்தார்.  அப்போது 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஸ்டாலின் விளக்கி கூறினார்.  தொடர்ந்து, தமிழகத்திற்கு மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.  தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Advertisement
Next Article