For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Assam-ல் ரூ.20 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் - ஒருவர் கைது!

09:15 AM Dec 23, 2024 IST | Web Editor
 assam ல் ரூ 20 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்   ஒருவர் கைது
Advertisement

அசாமில் ரூ.20 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சமீப காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசும், போலீசாரும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும், இவை தொடர்ந்து நடந்துக்கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில், அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் சாலை மார்க்கமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மாவட்டத்தின் பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில்கூரி என்ற இடத்துக்கு அருகே சாலையில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவர் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 'ஹெராயின்' போதைப்பொருள் மற்றும் 'யாபா' என அழைக்கப்படும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement