For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி | நேரில் வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

10:28 AM Jan 02, 2024 IST | Web Editor
திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி   நேரில் வரவேற்றார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் திருச்சி வருகை தந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

Advertisement

திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா,  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி இன்று (ஜன.2) தமிழ்நாடு வந்தார்.

விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக உயர்கல்வி துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்

இதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து இன்று காலை 10 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.  அவரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர்,  காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் மோடி,  அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.  அந்த விழாவில், 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

Advertisement