Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இருநாட்டு பயணங்களை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!

09:15 AM Jul 11, 2024 IST | Web Editor
Advertisement

ரஷ்யா, ஆஸ்திரியா பயணங்களை முடித்துக் கொண்டு இன்று (ஜூலை 11) காலை பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். 

Advertisement

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பின், பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவுக்கு சென்றிருந்தார். ரஷ்யாவில் இரண்டு நாட்கள் இருந்த அவர், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெஹம்மர்ரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் ஆஸ்திரியவாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசினார். இரு நாடுகளுக்கான பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.

ரஷ்ய பயணம் 

கடந்த 8ம் தேதி தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார். அதிபர் புதின் தனது அதிகாரப்பூர்வ மாளிகையில் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்தளித்தார். தொடர்ந்து 9ம் தேதி ரஷ்யவாழ் இந்தியர்களிடம் பேசிய பிரதமர் மோடி, உலக நன்மைக்காக தோஸ்த் ரஷ்யா உடன் இந்தியா தோளோடு தோள் கொடுத்து செயல்படுவதாக தெரிவித்தார்.

இதன்பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறவுகள், பொருளாதார கூட்டாண்மை மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பிரதமர் மோடியை தனது நண்பன் என பாராட்டியதோடு, ரஷ்யாவின் உயரிய விருதையும் வழங்கி அதிபர் புதின் கவுரவித்தார். அத்துடன் ரஷ்ய பயணம் முடிய, அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ஆஸ்திரியா சென்றடைந்தார்.

ஆஸ்திரியா பயணம்

ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து, இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து வியன்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். அப்போது, உலகத்திற்கு இந்தியா புத்தத்தை கொடுத்ததே தவிர, யுத்தத்தை கொடுக்கவில்லை எனக் கூறினார். தொடர்ந்து, இருநாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் மோடி இன்று காலை டெல்லி வந்தடைந்தார். இதன்மூலம் கடந்த 41 ஆண்டுகளில் ஆஸ்திரியாவிற்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

Tags :
AustriaDelhiNarendra modiPM Modirussia
Advertisement
Next Article