பிரதமர் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே? -கெஜ்ரிவால், மம்தா ஆதரவு!
"மல்லிகார்ஜூன கார்கே'தான் பிரதமர் வேட்பாளர் என 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் மமதா, கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லி அசோகாஓட்டலில் நேற்று மாலை நடை பெற்றது. இதில் முதல்வர்கள் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மக்களவை தேர்தல் முடிவுக்குப்பின் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை, இண்டியாகூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என மம்தா பானர்ஜி நேற்றைய கூட்டத்தில் விருப்பம் தெரிவித்தார். காங்கிரஸ்கட்சியுடன் இணைந்து செயல்படுவதில் இருந்து எப்போதும் விலகியிருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால், இத்திட்டத்தை வழிமொழிந்தார்.