பூசாரி கார்த்திக் முனியசாமி மீதான பாலியல் வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு!
சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனியசாமிக்கு எதிராக அளித்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும் பெண் ஒருவர், சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு தொடர்ச்சியாக சென்றுள்ளார். அந்த கோயிலின் பூசாரியாக இருந்த கார்த்திக் முனியசாமியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
கார்த்திக் முனுசாமி அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்று, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே அந்த பூசாரிக்கு திருமணமான நிலையில், இவரையும் திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே, பூசாரிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட அந்த பெண், இது தொடர்பாக விருகம்பாக்கப் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில், பூசாரி கார்த்திக் முனுசாமி மீது, ஏமாற்றுதல், பெண்ணுக்கு பாலியல் கொடுமை செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாகி உள்ள குற்றவாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : மருத்துவமனையில் கர்பிணிக்கு அனுமதி மறுப்பு! – ஆட்டோவில் பிறந்த குழந்தை!
இந்நிலையில், கார்த்திக் முனியசாமிக்கு எதிராக அளித்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை பாதிக்கப்பட்ட அந்த பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், புகார் மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.