For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எகிறிய தங்கம் விலை! இன்று எவ்வளவு தெரியுமா?

10:19 AM Dec 14, 2023 IST | Web Editor
எகிறிய தங்கம் விலை  இன்று எவ்வளவு தெரியுமா
Advertisement

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.960 உயர்ந்துள்ளது. 

Advertisement

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம்,  இறக்கம் காணப்படுவதுண்டு.  பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.  எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,  வெள்ளி விலை அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.  இந்த வார தொடக்க நாளில் இருந்து தொடர்ந்து,  ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில்,  இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,560-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.5,820-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.  கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.79.50-க்கும் பார் வெள்ளி ரூ.79,500-க்கும் விற்பனையாகிறது.

Advertisement