“கச்சத்தீவு ஒப்பந்தத்தின் போது தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி” - டி.ஆர். பாலு தகவல்!
“கச்சத்தீவு ஒப்பந்தம் 1976இல் கையெழுத்து ஆகும் பொழுது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது” என
03:50 PM Apr 05, 2025 IST | Web Editor
Advertisement
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, க . செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.
Advertisement
இக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த டி.ஆர்.பாலு,
"கச்சத்தீவு ஒப்பந்தம் 1976இல் கையெழுத்து ஆகும் பொழுது தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இசைவோ, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாட்டின் விருப்பம் கேட்காமல் இரண்டு அதிகாரிகளை வைத்து கையெழுத்து இட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது” என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.