மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் PNC கட்சி வெற்றி!
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முகம்மது முய்சு கட்சி 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
லட்சத்தீவுக்கு சென்ற பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படங்களை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் கடுமையாக விமர்சித்ததால் இந்தியா- மாலத்தீவு நாடுகள் இடையேயேன உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்திவுக்கு இந்தியர்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டும் என சினிமா பிரலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாலத்தீவு தலைநகர் மாலேவில் நடைபெற்ற மேயர் தேர்தலில் இந்தியாவுக்கு ஆதரவான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) வெற்றி பெறுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் பங்கேற்பதற்காக சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த முய்ஸூவுக்குப் பதிலாக, மாலேவின் புதிய மேயராக எம்.டி.பி வேட்பாளர் ஆடம் அசிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அசிமின் வெற்றியை "மகத்தான வெற்றி" என்றும் "பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி" என்றும் மாலத்தீவு ஊடகங்கள் தெரிவித்தன.
மாலத்தீவு ஊடகமான அதாவு வெளியிட்டுள்ள செய்தின் பட, ஆடம் அசிம் கடந்த அரசாங்கத்தின் போது மாலத்தீவு போக்குவரத்து மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் (எம்.டி.சி.சி) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். கூப்பர்ஸ் & லைப்ராண்ட் நிறுவனத்தில் தணிக்கையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தனது சொந்த வணிகத்தை நடத்துவதைத் தவிர, பல அரசாங்க பதவிகளையும் வகித்துள்ளதாக தெரிவ்க்கப்பட்டுள்ளது.
எம்.டி.சி.சியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கு முன்பு, அவர் டிசம்பர் 2018 முதல் ஜனவரி 2020 வரை மாலத்தீவு நீர் மற்றும் கழிவுநீரகற்று நிறுவனத்தின் (எம்.டபிள்யூ.எஸ்.சி) நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். நவம்பர் 2013 முதல் பிப்ரவரி 2015 வரை மாநில வர்த்தக அமைப்பின் (எஸ்.டி.ஓ) நிர்வாக இயக்குநராக இருந்தார்.
அசிம் 5,303 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸின் (பி.என்.சி) ஆயிஷாத் அசிமா ஷகூர் 3,301 வாக்குகளைப் பெற்றதாக மாலத்தீவின் சன் ஆன்லைன் செய்தி போர்ட்டல் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முய்சு அரசாங்கத்தின் மூன்று துணை அமைச்சர்கள் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நிலையில் மேயர் தேர்தல் நடந்தது, இது இந்தியாவுடனான இராஜதந்திர மோதலுக்கு வழிவகுத்தது. சீனாவுக்கான தனது உயர்மட்ட விஜயத்தின் போது, முயிஸ்ஸூ மாலத்தீவை பெய்ஜிங்குடன் நெருக்கமாக இணைக்க முயன்றார்.
5 நாள் அரசு முறைப் பயணமாக சீனா சென்ற அவர் ஜனவரி 13ஆம் தேதி அன்று மாலத்தீவு தலைநகரான மாலே திரும்பினார்.
மாலத்தீவு ஒரு சிறிய நாடு என்பதால் எங்களை "மிரட்ட" யாருக்கும் "உரிமை" இல்லை என கூறி உள்ள அவர் மாலத்தீவு ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு என்றும் கூறி இருந்தார்.