ஐரோப்பிய நாடுகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணம்!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக 4 நாட்கள் ஐரோப்பாவிற்கு சென்றார். இந்த நிலையில் குடியரசு தலைவர் தனி விமானம் மூலம் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை போர்ச்சுகலில் உள்ள இந்திய தூதர் புனீத் ஆர் குண்டல் மற்றும் இந்தியாவில் உள்ள போர்ச்சுகல் தூதர் ஜோவா ரிபேரோ டி அல்மீடியா ஆகியோர் வரவேற்றனர்.
இந்திய குடியரசு தலைவர் போர்ச்சுக்கலுக்கு செல்வது 27 ஆண்டுகளில் முதன்முறையாகும். தலைநகர் லிஸ்பனில் அந்த நாட்டின் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா, பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ முதலிய உயர்மட்டத் தலைவர்களுடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு அடுத்தப்படியாக சுலோவாகியாவுக்கு செல்கிறார். அங்கு அவர் சுலோவாகியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, பிரதமர் ராபர்ட் பிகோ மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ரிச்சர்ட் ராசி ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்த பயணங்களின் போது இந்தியா-போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா இடையே மூலோபாயம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.