Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் தீவிரம்!

05:11 PM Jan 02, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளில் விழா கமிட்டியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாடிவாசல், பார்வையாளர் மாடம் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசும் பணியும் முதற்கட்டமாக துவங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆண்டுதோறும் தைப்பொங்கலையொட்டி மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-ம் தேதி நடைபெறவுள்ளதால், பாலமேடு விழா கமிட்டியினர் ஜல்லிக்கட்டுக்கான அழைப்பிதழ் அச்சடித்து விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரசாணை மூலமாக வெளியிட்டது. விழாவின் முதற்கட்ட பணிகளாக, இன்று பாலமேடு மஞ்சமலை ஆற்றில் உள்ள வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்ளிட்ட பகுதிகளில் வர்ணம் திட்டம் பணியுடன் துவங்கியது.

இதுகுறித்து பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“நீதிமன்றத்தில் அரசாணை பெற்று தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. அரசு உத்தரவின் பேரில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் உச்சநீதிமன்றத்தின் சட்ட விதிகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

காளைகளும், மாடுபிடி வீரர்களும் முறையான மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வரிசையாக களம் இறக்கப்படுவர். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழ்நாடு அரசு முதலமைச்சர் சார்பாக கார் ஒன்றும், 2வது பரிசு பெறும் மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனமும், சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனமும், இரண்டாவது பரிசாக நாட்டு பசு மாடும், கன்றுகுட்டியும் வழங்கப்படும். இது தவிர தங்க காசு, பீரோ, மிதிவண்டி உள்ளிட்ட விலை உயர்ந்த பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்” என தெரிவித்தனர்.

Tags :
CMO TamilNaduJallikattuMaduraiMK StalinNews7Tamilnews7TamilUpdatesPalameduPalamedu JallikattuTN Govt
Advertisement
Next Article