For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்துவை கரம்பிடித்தார் பிரேம்ஜி | திருமணம் போட்டோஸ் வைரல்!

12:37 PM Jun 09, 2024 IST | Web Editor
இந்துவை கரம்பிடித்தார் பிரேம்ஜி   திருமணம் போட்டோஸ் வைரல்
Advertisement

நடிகரும் - இசையமையாளருமான பிரேம்ஜி, தன்னுடைய காதலி இந்துவை இன்று காலை திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட நிலையில், இது குறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Advertisement

இன்று மிகவும் எளிமையாக பாடகரும் இசையமைப்பாளரும் ஆன பிரேம்ஜியின் திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் நடந்து முடிந்திருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இவர்களது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்து என்ற பெண்ணை காதலித்து பிரேம்ஜி திருமணம் செய்து இருக்கிறார்.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை அவருடைய அண்ணனும் இயக்குனருமான வெங்கட் பிரபு உடன் இருந்து அனைத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார். திருமணம் முடிந்த புகைப்படங்கள் இணையதளத்தில் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. திருமணத்திற்கான வரவேற்பு சென்னையில் நாளை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தம் நடைபெற்று அது சம்பந்தமான புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகின. பிரேம்ஜி திருமணத்திற்கு நடிகர் சிவா, ஜெய், பாடகர் யுகேந்திரன் மற்றும் முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டிருந்தனர். நீண்ட வருட காத்திருப்புக்குப் பின் பிரேம்ஜி அவருடைய திருமணம் நடைபெற்று இருக்கிறது.

Advertisement