பிரேம்ஜி - இந்து நிச்சியதார்த்தம் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
பிரேம்ஜி - இந்து நிச்சியதார்த்தம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான பன்முகக் கலைஞரான கங்கை அமரனின் இளைய மகனான நடிகர் பிரேம்ஜியின் திருமணம் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்தது. இன்னும் பேச்சுலராகவே இருக்கிறாரே என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் தான், திடீரென சில தினங்களுக்கு முன்னர் நடிகர் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியது. பிரேம்ஜிக்கு வரும் ஜூன் 9ஆம் தேதி இந்து என்ற பெண்ணுடன் திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது.
இதுவரையில் பிரேம்ஜி திருமணம் குறித்து ஆர்வமாக இருந்த ரசிகர்கள் தற்போது அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மணமகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்து என்ற பெண்ணை பிரேம்ஜி நாளைய தினம் திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் காதல் திருமணம் என்று கூறப்பட்டுள்ளது.
நாளைய தினம் திருத்தணி கோயிலில் நடக்கவுள்ள பிரேம்ஜி மற்றும் இந்து திருமணத்தின் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இயக்குனர் வெங்கட் பிரபு இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில், பிரேம்ஜி - இந்து நிச்சியதார்த்தம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.