’உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்!
தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்பரமாக ஈடுபாடுள்ளன. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓரணியில் தமிழ் நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை நடத்திவருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வரிசையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பயணம் ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்படிருந்தது. அதன்படி இன்று மாலை ஆரம்பாக்கத்தில் விநாயகர் கோவிலில் பூஜை செய்து ’உள்ளம் தேடி இல்லம்
நாடி’ பயணத்தை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது விஜய பிரபாகரன், எல் கே சுதிஸ், பார்த்தசாரதி உள்ளிட்ட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக பூத் முகவர்களை சந்திக்கிறார்.