For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேன்ஸ் திரைப்பட விழாவில் சந்தோஷ் சிவனுடனான புகைப்படங்களை பகிர்ந்த ப்ரீத்தி ஜிந்தா!

02:07 PM May 28, 2024 IST | Web Editor
கேன்ஸ் திரைப்பட விழாவில் சந்தோஷ் சிவனுடனான புகைப்படங்களை பகிர்ந்த ப்ரீத்தி ஜிந்தா
Advertisement

‘கேன்ஸ் திரைப்பட விழாவில்’ சந்தோஷ் சிவனுக்கு விருது வழங்கிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. 

Advertisement

உலகப் புகழ் பெற்ற ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  இதில் பல்வேறு பிரிவுகளில் கீழ் படங்கள் திரையிடப்பட்டும்,  விருதுகளும் வழங்கப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா கடந்த மே 14 முதல் 25 வரை நடைபெற்றது. இதில் இந்திய சார்பில் நான்கு விருதுகள் பெறப்பட்டுள்ளன.

அதில் ஒன்று Pierre Angenieux ExcelLens in Cinematography. சிறந்த ஒளிப்பதிவாளருக்கு வழங்கப்படும் இந்த விருதினை இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பெற்றார். உலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் இந்த கௌரவ விருது 2024ஆம் ஆண்டிற்கு சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் ஆசியாவிலிருந்து இவ்விருதை பெறும் முதல் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவருக்கு இந்த விருதினை ஐபிஎல் பஞ்சாப் அணியின் உரிமையாளரும்,  பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா வழங்கினார்.  இந்த புகைப்படவங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில்,

2024ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க Pierre Angenieux விருதை அறிவான, மிகத்திறமையான முதல் ஆசியாவினரான சந்தோஷ் சிவனுக்கு வழங்கியதில் பெருமை அடைகிறேன். முன்னர் தில் சே,  தற்போது லாகூர் 1947 போன்றவற்றில் அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த வரம்.  எனது நண்பனும், சக ஊழியருமான அவரை நினைத்து மகிழ்ச்சியும்,  பெருமையும் கொள்கிறேன்.  இவை அனைத்திற்கும் தகுதியானவன் நீ.  வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement