For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?” - ஹரியானா மற்றும் காஷ்மீரியில் #INDIA கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் வெளியீடு!

09:56 PM Oct 05, 2024 IST | Web Editor
“கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா ”   ஹரியானா மற்றும் காஷ்மீரியில்  india கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் வெளியீடு
Advertisement

ஹரியானா மற்றும் காஷ்மீரியில் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிலவரங்கள் கூறுகின்றன.

Advertisement

ஜம்மு காஷ்மீர்:

புவிசார் அரசியல் ரீதியாக ஜம்மு காஷ்மீர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே முக்கிய பிரச்னையாக காஷ்மீர்தான் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், தங்களுக்கு சொந்தமான இடம் என பாகிஸ்தான் கூறி வருகிறது. இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர், இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்தது.

இந்த நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா:

ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. அங்கு மொத்தமுள்ள 90 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்துள்ளது. அதில் அதிகாலை முதலே மாலை வரையிலும் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஹரியானா மாநிலத்தில் என்ன தான் பல பிராந்திய கட்சிகள் இருந்தாலும் அங்கு நேரடி போட்டி என்னவோ பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சியும் இடையே தான். இரு கட்சிகளும் தான் 90 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. இதில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக தேர்தலை எதிர்கொண்டது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் களமிறங்கியது. பல்வேறு காரணங்களால் இந்த முறை பாஜக மீது ஹரியானா மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்பட்டது.

இதனால் தொடக்கம் முதலே அங்குக் காங்கிரஸ் கட்சி சாதகமான ஒரு நிலையே இருந்தது. இதற்கிடையே இப்போது ஹரியானாவில் நடத்தப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் ஆட்சியில் உள்ள பாஜக படுதோல்வி அடையும் என்றும் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  • ஹரியானா கருத்துக்கணிப்பு முடிவுகள்:
  • டைனிக் பாஸ்கர்: பாஜக 19-29 இடங்கள், காங்கிரஸ் 44-54 இடங்கள்
  • துருவ் ரிசர்ச்: பாஜக 22-32, காங்கிரஸ் 50-64
  • இண்டியா டூடே - சி வோட்டர்: பாஜக 20-28, காங்கிரஸ் 50-58
  • ஜிஸ்ட் - டிஃப் ரிசர்ச்: பாஜக 29-37, காங்கிரஸ் 45-53
  • பீப்புள்ஸ் ப்ளஸ்: பாஜக 20-32, காங்கிரஸ் 49-61
  • ரிபப்ளிக் பாரத் - மட்ரீஸ்: பாஜக 18-24, காங்கிரஸ் 55-62
  • ரிபப்ளிக் டிவி - பி-மார்க்: பாஜக 27-35, காங்கிரஸ் 51-61
  • ஜம்மு காஷ்மீர் கருத்துக்கணிப்பு முடிவுகள்:
  • ஆக்ஸிஸ் மை இந்தியா: பாஜக 24- 34, காங்.+என்சிபி 35-45, பிடிபி 4-6
  • தைனிக் பாஸ்கர்: பாஜக 20-25, காங்.+ என்சிபி 35-40, பிடிபி 4-7
  • இண்டியா டுடே சி-வோட்டர்: பாஜக 2 -32, காங்.+என்சிபி 40-48, பிடிபி 6-12
  • பிப்புள்ஸ் ப்ளஸ்: பாஜக 23-27, காங்.+என்சிபி 46-50, பிடிபி, 7-11
Tags :
Advertisement