Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு!

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலத்தில் பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்துள்ளார்.
04:01 PM Feb 10, 2025 IST | Web Editor
Advertisement

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கிய விஜய்,  2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு ஓராண்டாக செயல்பட்டு வருகிறார். இதற்காக சமீபத்தில் 5 கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்தார். இதற்கிடையில் அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலர் நிர்மல் குமார் மற்றும் விசிகவில் இருந்து இடைநீக்கம்  செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

Advertisement

அதன்படி தவெக-வின் துணைப் பொதுச் செயலாளராக நிர்மல் குமாரும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி இந்தாண்டு மார்ச் முதல் வாரத்தில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணிபுரிந்த பிரசாந்த் கிஷோர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளார். சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலத்தில்  பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Prashant KishortvkpartyTVKVijayvijay
Advertisement
Next Article