Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வெற்றி பெற்ற ஒரு மணி நேரத்தில் மது விலக்கு ரத்து செய்யப்படும்" - #PrashantKishor பேட்டி!

04:17 PM Sep 15, 2024 IST | Web Editor
Advertisement

பீகாரில் ஆட்சிக்கு வந்தால், பதவியேற்ற ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Advertisement

அரசியல் வியூக நிபுணராக அறியப்படும் பிரசாந்த் கிஷோர், பீகாரில் தனது ' ஜன் சுராஜ்' அமைப்பை புதிய கட்சியாக தொடங்க திட்டமிட்டுள்ளார். வரும் 2-ஆம் தேதி தனது கட்சியை முறைப்படி தொடங்குகிறார். இதன் வாயிலாக பீகாரில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க பிரசாந்த் கிஷோர் ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில், பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியை வெற்றிபெறச் செய்தால், ஆட்சி அமைத்த ஒரு மணி நேரத்திற்குள் அம்மாநிலத்தில் உள்ள மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “சுயமரியாதையைவிட முக்கியமானது வேறு எதுவுமில்லை!” – #CWC ஷோவில் இருந்து மணிமேகலை விலகல்!

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:

"மாநிலத்தில் தற்போது உள்ள மதுவிலக்கு கட்டுப்பாடுகள் பயனற்றது. அது சட்டவிரோதமாக மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய வழிவகுத்தது. மாநிலம் ரூ. 20,000 கோடி கலால் வருவாயை இழந்து இருக்கிறது. பீகாரில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை நீக்கிவிடுவேன்" இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Biharjan suraajliguor banNews7Tamilnews7TamilUpdatesPrashant Kishor
Advertisement
Next Article