For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதி!

08:41 PM Jan 07, 2025 IST | Web Editor
பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதி
Advertisement

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

Advertisement

இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்த பிரணாப் முகர்ஜி. இவர் கடந்த 2020 ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி ராஜ்காட் வளாகத்தின் ஒரு பகுதியாக உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி என்ற வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.

பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிதா முகர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது,

“அப்பாவுக்கு நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் எதிர்பார்த்திடாத பிரதமர் மோடியின் இந்தச் செயல் எங்களை மிகவும் சந்தோசப்படுத்தியுள்ளது. எனது அப்பா அரசு மரியாதையைக் கேட்கக்கூடாது. அரசே வழங்கவேண்டும் என்று கூறுவார். அப்பாவின் நினைவைப் போற்றும் வகையில் இந்தச் செயலை செய்ததற்கு, பிரதமர் மோடிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இந்தச் செயல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement