"கார்ல் மார்க்ஸுக்கு புகழ் வணக்கம்" - தவெக தலைவர் விஜய் அறிக்கை!
கடந்த 1818 ம் ஆண்டு மே 5ம் தேதி, ஜெர்மனியில் பிறந்தவர் கார்ல் மார்க்ஸ். இவரது தந்தை ஐன்றிச் மார்க்ஸ், ஒரு வழக்கறிஞர். பெற்றோருக்கு மத நம்பிக்கை அதிகம் இருந்தாலும், கார்ல் மார்க்ஸுக்கு மதங்களின் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மாறாக இமானுவேல் காந்த், வோட்டர் ஆகிய தத்துவவாதிகளின் தத்துவங்களில் ஈர்க்கப்பட்டார்.
கார்ல் மார்க்ஸ் தனது 17 ம் வயதில் பான் பல்கழைக்கலகத்தில் சட்டம் பயின்றார். அப்போதே பொதுவுடைமை கொள்கையுடன் இருந்த மார்க்ஸ், சோஷலிச துண்டறிக்கை வெளியிட்டதைக் கண்டித்து, பல்கழைக்கழகம் அவரை வெளியேற்றியது. அதன்பின் 1841 ல் தனது பட்டப்படிப்பை பெர்லின் பல்கழைக்கழகத்தில் முடித்தார்.
பின்னர் சில காலம் இதழியல் துறையில் இருந்தார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு, கொலோன் நகரில் இரைனிசு சைத்துங்கு என்னும் இதழின் ஆசிரியராக சில காலம் பணியாற்றினார். 1844ல் பிரெடரிக் ஏங்கல்சுடன் இணைந்து பாட்டாளிகள் (தொழிலாளிகள்) எவ்வாறு முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என்பதை ஆய்வுகளின் வழியே கூறினார். 1850-க்குப் பின் கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் மார்க்ஸ் போராடினார். கடனாளியாக மாறிய போதும், தொழிலாளர் நலனுக்காக போராடிக்கொண்டே இருந்தார். அத்தனை நேரத்திலும் அவரின் மனைவி அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
”பாட்டாளிகளின் அடக்குமுறையை தகர்த்தெரிய அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்று அவரின் எழுத்துகள் தொழிளாளர்களிடையே உத்வேகத்தை தந்தது. இன்றும்கூட தொழிலாளரின் நலனென்றால் கார்ல் மார்க்ஸின் கொள்கைகளும் சித்தாந்தங்களுமே முன்வந்தது நிற்கும்! அதனாலேயே மாமேதை மார்க்ஸ் ‘ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளர்’ என அறியப்படுகிறார் என்றால் அது மிகையாகாது.
இந்த நிலையில் பொருளாதார மாமேதை கார்ல் மார்க்சின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அவர் குறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"உழைப்பே எல்லாச் செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலதனம்
என்றுரைத்த பொதுவுடைமைச் சிந்தனைவாதி
கார்ல் மார்க்ஸ் பிறந்த நாளில் அவருக்கு புகழ் வணக்கம்!"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.