பிரதோஷ வழிபாடு | சதுரகிரி மலை கோயிலில் குவிந்த பக்தர்கள்!
பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றானர்.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமான சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க கோவிலில், மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய தினங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தை மாத அமாவாசை பிப்ரவரி 9ஆம் தேதி வர இருப்பதால், சதுரகிரி கோவிலில் பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
இந்த பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொள்ளும்படி நாளை (பிப்ரவரி 7) முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். அதேபோல் மலை பாதையில் செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று முதல் வரும் பத்தாம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் சதுரகிரி தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் இருந்து மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.