“பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு நாளை வெளியாகும்!” - படக்குழு அறிவிப்பு!
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் அறிமுக வீடியோ கடந்த மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 'ஓ மை கடவுளே' திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இதையும் படியுங்கள் : உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை! – பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
கலகலப்பான காட்சிகள் நிறைந்த புதிய திரைப்படத்தின் அறிமுக வீடியோ, அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் இடையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை கதையை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு நாளை காலை 9 மணி அளவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 'லவ் டுடே' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பிரதீப் இயக்கி நடித்திருந்த 'லவ் டுடே' திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'லவ் டுடே' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தமிழ் திரையுலகில் முக்கியமான நபராக உருவெடுத்துள்ளார்.