For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TheeraVisaripatheMei ஹேஸ்டேக்குடன் கமல்ஹாசனை வாழ்த்திய பிரதீப் ஆண்டனி!

04:23 PM Nov 07, 2023 IST | Web Editor
 theeravisaripathemei ஹேஸ்டேக்குடன் கமல்ஹாசனை வாழ்த்திய பிரதீப் ஆண்டனி
Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் பிரதீப் ஆண்டனி கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது.  இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களில் அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி ஆகியோர் ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து வெளியேறினர். பவா செல்லதுரை உடல்நிலை காரணமாகத் தாமாகவே முன்வந்து வெளியேறினார்.

போட்டியின் 4-வது வார இறுதியில் தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்னபாரதி ஆகிய 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். தொடர்ந்து 5-வது வாரத்தில் நடந்த போட்டியில் பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் பிரதீப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டது.

வார இறுதி எபிசோட் தொடங்கியதுமே, மாயா, விஷ்ணு, பூர்ணிமா உள்ளிட்ட பெரும்பாலான போட்டியாளர்கள் தங்கள் கைகளில் கட்டியிருந்த செங்கொடியை உயர்த்தி ‘உரிமைக் குரல்’ எழுப்பினார்கள். அனைவரின் புகாரும் பிரதீப் மீதுதான். தகாத வார்த்தை பேசுகிறார், எல்லை மீறுகிறார், இரவில் தூங்க பயமாக இருக்கிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

பின்னர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கலாமா அல்லது தொடரச் செய்யலாமா என்று ஒவ்வொரு போட்டியாளராக கன்ஃபெஷன் ரூமில் அழைத்து தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார் கமல். இதில், பெரும்பாலானோர் பிரதீப்புக்கு எதிராக வாக்களித்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். இதனால், கமல்ஹாசன் நடுநிலையுடன் செயல்படவில்லை என்று பிக் பாஸ் ரசிகர்களால் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பிரதீப் ஆண்டனி பதிவிட்டுள்ளார். அதில், “சத்தியமாக சொல்கிறேன், நான் உங்களின் தீவிர ரசிகன் கமல் சார். உங்களுக்கு 69-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவுக்கு நீங்கள் ஆற்றிய கலை மற்றும் பங்களிப்புகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீர விசாரிப்பதே மெய், நல்லா இருங்க என்ற ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு, கமல் நடித்த வசூல்ராஜா படத்தின் காணொலி ஒன்றையும் இணைத்துள்ளார்.

Tags :
Advertisement