Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் BTS புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

02:04 PM Aug 11, 2024 IST | Web Editor
Advertisement

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின்
படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisement

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அறிவியல் – புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம் அதன் அட்டகாசமான கிராஃபிக்ஸ் மறு்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.  இருப்பினும் திரைக்கதை சோர்வைத் தருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  இந்த சூழலில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்த திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.191 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : யாரு சாமி நீ.. ஒரே நாளில் 15 உலக சாதனைகளை முறியடித்த நபர்!

இந்த திரைப்படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், இந்த திரைப்படத்தில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
bts photosKalki 2898 ADphotosPrabhasshooting set
Advertisement
Next Article