உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2024ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இந்தியாவின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏப்.29 ஆம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி ஏற்றார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பி.ஆர்.கவாய்க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாநகர் ஓம்.பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மத்திய அமைச்சர் ஜெ.பி.நாட்டா, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.