For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜப்பானில் நிலநடுக்கம் - பல்வேறு நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு!

03:48 PM Jan 01, 2024 IST | Web Editor
ஜப்பானில் நிலநடுக்கம்   பல்வேறு நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு
Advertisement

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டதாகவும், நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 10-க்கும் அதிக முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஹோன்ஷு அருகே 13 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதியில் உள்ள கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு சுமார் 33,500 வீடுகளில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது. மேலும் மத்திய ஜப்பானில் தொடர்ச்சியான பெரிய பூகம்பங்களின் காரணமாக அந்நாட்டின் மையப்பகுதியைச் சுற்றி பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags :
Advertisement