Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டோங்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும் - சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்குட்பட்ட பாலினேசியா துணைக் கண்டத்தில் உள்ள டோங்கா தீவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
07:50 PM Mar 30, 2025 IST | Web Editor
Advertisement

ஆஸ்திரேலியாவுக்குட்பட்ட பாலினேசியா துணைக் கண்டத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளில்  100,000 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் அங்குள்ள பிரதான தீவான டோங்காவில் வசிக்கின்றனர். இத்தீவுகளில் வெள்ளை மணல் கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகளைக் கொண்டுள்ளன.

Advertisement

இந்த நிலையில் டோங்கா தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் திங்கட்கிழமை(மார்ச்.31) அதிகாலை 10 கிலோ மீட்டர் ஆழத்தில்  7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கத்தால் ஏற்படும் அபாயகரமான சுனாமி அலைகள் டோங்கா கடற்கரையில் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் (186 மைல்) க்குள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வமாக இன்னும்  வெளிவரவில்லை.

Tags :
AustraliaearthquakeTongatsunamiwarning
Advertisement
Next Article