Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சுட்டெரிக்கும் கோடை வெயில்! ஜூன் 10-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு!

04:09 PM May 31, 2024 IST | Web Editor
Advertisement

2024-2025-ம் கல்வியாண்டில் 1 முதல் 12 -ஆம் வகுப்புகளுக்கான பள்ளி திறப்பு வரும் ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

Advertisement

தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மேலும், மக்களவைத் தேர்தல் முன்னிட்டு இந்தாண்டு கூடுதலாக கிடைத்துள்ள விடுமுறை நாட்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கழித்து வருகின்றனர்.

வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இதனிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து கோரிக்கை வலுத்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் 1 முதல் 12 - ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ஆம் தேதி (திங்கள் கிழமை) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags :
DMKnews7 tamilNews7 Tamil UpdatesReOpenSchoolTamilNadutn schools
Advertisement
Next Article