மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்ட இளம் கிரிக்கெட் ஆர்வலரின் புகைப்படம் வைரல்!
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தர்மசாலாவில் கலந்து கொண்ட உலகக் கோப்பை போட்டியின் போது சந்தித்த இளம் கிரிக்கெட் ஆர்வலரின் புகைப்படத்தை வெளியிட்டார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தர்மசாலாவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார். அவர் அன்று எடுத்த புகைப்படம் ஒன்றை X தளத்தில் பதிவிட்டார். அவர் பகிர்ந்த புகைப்படத்தில் இரயக்ஸ் என்ற சிறுவன் அமைச்சருக்கு ஒரு அட்டையைக் காட்டினார். அதில் “ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாடுவேன், என்னை நினைவில் வையுங்கள்” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
புகைப்படத்தை ஒரு சிறப்பு குறிப்புடன் அமைச்சர் பதிவிட்டார். “ இரயக்ஸ் அகர்வாலின் உறுதியையும் கனவுகளையும் பார்ப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. அட்டையிலிருந்து ஆடுகளம் வரை உங்கள் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! உங்கள் கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அவை நிஜமாவதை நாங்கள் பார்ப்போம் ” என்று அனுராக் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.