Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தபால் வாக்குகளை முதலில் அறிவிக்க வேண்டும்! - தேர்தல் ஆணையத்திடம் I.N.D.I.A. கூட்டணி மனு!

07:22 PM Jun 02, 2024 IST | Web Editor
Advertisement

வாக்குப்பதிவு நாளன்று தபால் வாக்குகளை முதலில் அறிவிக்க வேண்டுமென I.N.D.I.A. கூட்டணி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி நேற்று வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே I.N.D.I.A. கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் என்னை சிறையில் அடைத்தீர்கள்? - அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி!

நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், INDIA கூட்டணி சார்பில், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக பொருளாளர் டி. ஆர். பாலு, முன்னாள் எம்.பி. அபிஷேக் சிங்வி ஆகியோர் டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் வாக்கு எண்ணிக்கை நாள் அன்று, தபால் வாக்குகளை முதலில் அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
#INDIAAllianceCongressElectionCommissionElectionResultLokSabhaElections2024MallikarjunaKhargeRahulGandhi
Advertisement
Next Article