மனித உருவம் கொண்ட ரோபோவால் வரையப்பட்ட உருவப்படம் $1 மில்லியனுக்கு விற்பனை!
மனித உருவ ரோபோவால் வரையப்பட்ட ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படம் $1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது.
உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் ரோபோவான "ஐ-டா" வரைந்த 2.2-மீட்டர் (7.5-அடி) உயரம் கொண்ட “AI கடவுள்” எனப் பெயர் கொண்ட உருவப்படம் 1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. ஏஐ-டா எனப் பெயரிடப்பட்டுள்ள மனித உருவம் கொண்ட இந்த ரோபோ, ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படத்தை வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த ஓவியத்தின் தனித்துவம் குறித்து ரோபோவே அனைவருக்கும் விளக்கி கூறியுள்ளது. Sotheby's Digital Art Sale இல் இந்த ஓவியம் விற்கப்பட்டுள்ளது. ‘ஏஐ-டா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன மனித உருவ ரோபோ ஐடன் மெல்லர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்கை நுண்ணறிவு நிபுணர்களின் உதவியோடு இந்த ஏஐ-டாவை மெல்லர் உருவாக்கியுள்ளார்.
 
 
            