For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி - தமிழ்நாடு சார்பில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாடு சார்பில் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
02:36 PM Apr 22, 2025 IST | Web Editor
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி   தமிழ்நாடு சார்பில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு க  ஸ்டாலின் உத்தரவு
Advertisement

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று(ஏப்ரல்.22 காலமானர். இதையடுத்து அவரத் உடல் நாளை புனித பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலில் தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பரிவோடும், முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவு குறித்து  மிகவும் வேதனையடைந்ததாகத் தெரிவித்திருந்தார்.

அதோடு, இன்று (22-4-2025) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்ள முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்து.

Tags :
Advertisement