பூஞ்ச் தாக்குதல் - தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்!
ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என இந்திய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில் இரு வாகனங்களில் சென்று கொண்டிருந்த இந்திய பாதுகாப்பு படையின் விமானப்படை வீரர்கள் மீது சிலர் துப்பாக்கிசூடு நடத்தினர். இதற்கு, விமானப்படை வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் உத்தம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் படைத்துறை தலைவர் விக்கி பஹாடே உயிரிழந்தார்.
இந்த தாக்குதலையடுத்து ஷாசிதார் பகுதியில் ஆயுதப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேர் படத்தை இந்திய பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர். அவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.