காஞ்சனா-4 | பேயாக நடிக்கும் பூஜா ஹெக்டே?
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், காஞ்சனா-4 பாகம் உருவாகும் நிலையில் இதில் புஜா ஹெக்டே இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இதில் ராகவா லாரன்ஸ், சரத் குமார், கோவை சரலா, ராய் லக்ஷ்மி என பலர் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது. குறிப்பாக, நடிகர் சரத்குமாரின் நடிப்பு பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, காஞ்சனா 2-ம் பாகம் படத்தை எடுத்தார். அதுவும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. பின், 2019-ல் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றிப்படமாக அமைந்து.
இதைத்தொடர்ந்து, அடுத்ததாக ராகவேந்திரா புரொடக்ஷன் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 4 உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாகவும், இதில் பூஜா ஹெக்டே பேய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.