Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சூர்யா 44” படத்தில் ஜோடியாக இணைந்த பூஜா ஹெக்டே... படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

01:02 PM May 17, 2024 IST | Web Editor
Advertisement

கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியில் உருவாகும் சூர்யா 44 படத்தில் நடிக்கவிருக்கும் நபர்கள், சூட்டிங் தொடங்கவிருக்கும் நாள் குறித்த அப்டேட்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் சூர்யாவின் 44வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சூர்யா 44 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார்.

வரும் ஜூன் 2-ம் தேதி அந்தமானில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Tags :
Kanguvakarthik subbarajNews7Tamilnews7TamilUpdatesPooja Hedgesanthosh narayananSuriyaSurya 44
Advertisement
Next Article