Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தந்தி மாரியம்மன் கோயிலில் பூ குண்டம் திருவிழா‌ : லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!

07:29 AM Apr 15, 2024 IST | Web Editor
Advertisement

குன்னுார் தந்தி மாரியம்மன் கோயில் பூகுண்டம் இறங்கும் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

Advertisement

நீலகிரி மாவட்டம் குன்னுார் தந்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்ந கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டுக்கான சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான, பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : கேரளாவுக்கு உள்ளே எதிர்க்கட்சி… வெளியே கூட்டணி… – I.N.D.I.A. கூட்டணியை விமர்சித்த சீமான்!

முன்னதாக, பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் இருந்து அபிஷேக பொருட்கள் ஊர்வலம் கொண்டுவரப்பட்டது.  அதன் பின்னர், தந்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,
அலங்காரம் தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தன. பின்னர், அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, பூ குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். மேலும், பக்தர்கள் பலரும் தங்களை சாட்டையால் அடித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நாளை நடைபெற உள்ளது.

Tags :
coonoordevoteesPoo Gundam Festivalsami dharshanThandi Mariamman Temple
Advertisement
Next Article