Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொன்னர் – சங்கர் கோயில் மாசி பெருந்திருவிழா ; வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

09:09 PM Mar 17, 2024 IST | Web Editor
Advertisement

மணப்பாறையில் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசிப் பெருந்திருவிழாவின்
முக்கிய நிகழ்வான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் பெரிய தேரோட்டம்
நடைபெற்றது.

Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னிவளநாட்டில் அரண்மனைகட்டி வாழ்ந்த,
அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்டும் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீர
வரலாற்று சிறப்புமிக்க மாசிப்பெருந்திருவிழா, வளநாட்டிலும், வீரப்பூரிலும் கடந்த 9 தினங்களாக நடைபெற்று வந்தது. மணப்பாறை அடுத்த வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலில் கடந்த மார்ச் 9-ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் விழாவாக பொன்னி வளநாட்டில், தங்கை அருக்காணி என்னும் தங்காளுக்கு பொன்னர் கிளி பிடிக்க வீரமலை பகுதிக்கு சென்று கிளி வேட்டை நடத்தி தங்கைக்கு கிளி பிடித்து தந்த வீர வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.

பின் அதே இரவு அண்ணன்மார் தெய்வங்கள் போரிட்டு மாண்ட இடமான படுகளத்தில் உள்ள பொன்னர் – சங்கர் கோயிலில் படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வீரப்பூர் கன்னிமாரம்மன் வகையறா கோயில் பெரிய
காண்டியம்மன் ஆலயத் திடலில் 8-ஆம் நாள் திருவிழாவாக சனிக்கிழமை மாலை வேடபரி
அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று ஆலய உற்சவ தெய்வம் ஸ்ரீ பெரிய காண்டியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தேருக்கு ஊர் முக்கியஸ்தர்களால் கொண்டுவரப்பட்டது.

அதன்பின் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, மாயவர் என்றழைக்கும் சாம்புவன் உயிர் காளை மீது அமர்ந்து முரசு கொட்டி முன்னே செல்ல, அதைத்தொடர்ந்து வீரப்பூர் ஜமீன்தார்கள் பரம்பரை அறங்காவலர்கள் ஆர்.பொன்னழகேசன், ஆர்.செளந்தரபாண்டியன், கே.அசோக்குமார், ஆர்.தரனீஸ் மற்றும் பட்டையதாரர்கள்
வடம் தொட்டு தர பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான
பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் கோயில் முக்கிய
வீதிகளில் வலம் வந்து பின் நிலைமண்டபத்தை அடைந்தது.

Tags :
festivalmaasi thiruvizhaPonnan Shankar TempleTherottamTrichy
Advertisement
Next Article