பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு - தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்!
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
05:47 PM Feb 13, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வனத்துறை அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட பொன்முடிக்கு, கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி காதி மற்றும் கிராம தொழில் வாரிய துறையும் கூடுதலாக கவனிப்பார் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறையை மட்டுமே கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையின் படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.